News
Loading...

பக்ரீத் பண்டிகைக்காக தமிழ்நாட்டில் ஒட்டகம் வெட்ட ஐகோர்ட் தடை

பக்ரீத் பண்டிகைக்காக தமிழ்நாட்டில் ஒட்டகம் வெட்ட ஐகோர்ட் தடை

சென்னை: பக்ரீத் பண்டிகைக்காக தமிழ்நாட்டில் ஒட்டகம் வெட்டக்கூடாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட உரிய வசதிகள் செய்து தரக்கோரி தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மஹாதேவன் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர். இந்திய தேசிய லீக் கட்சியின் தடா அப்துல் ரஹீம் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

உரிய வசதிகள் இல்லாத இடத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. மத்திய அரசின் விதிமுறைகளை பரிசீலித்தப்பிறகு தான் ஒட்டகம் வெட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஒட்டகம் வெட்ட அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மேலும் ஒட்டகம் வெட்ட அனுமதிக்கக்கூடாது என காவல் நிலையங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒட்டகம் வெட்டப்படவில்லை என்பதை அரசும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐகோட் கூறியுள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...