News
Loading...

ஜெயலலிதா பற்றி மலையாள நாளிதழ் மங்களம் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்.

ஜெயலலிதா பற்றி மலையாள நாளிதழ் மங்களம் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்.

மலையாள நாளிதழ் மங்களம் நேற்று வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்.

ஜெயலலிதா குருதர அவஸ்தையில்.
(குருதர அவஸ்தை என்றால் ஆபத்தான நிலை என்றே பொருள்.)

சென்னை.
தமிழ்நாடு முதலமைச்சரும்,அதிமுக தலைவருமான ஜெ.ஜெயலலிதா ஆபத்தான நிலையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கிறது.

மூச்சுத் திணறல்,கல்லீரல் பாதிப்பு,சர்க்கரை நோய் ஆகிய பிரச்சனைகள் அதிகமானதால் சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.தற்காலிக சுவாசக் குழாய் மூலம் இருதயம் செயல்படுத்தப்படுகிறது.

எய்ம்ஸ் மற்றும் சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற மருத்துவர்களும் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.ஆபத்தான நிலை தொடர்ந்தால் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படும் வாய்ப்பு உண்டு.
ஆனால் தற்போதைய சூழலில் கொண்டு செலலும் நிலையில் உடல்நிலை இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல்வரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது. தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

மருத்துவர்கள் காய்ச்சல் மட்டும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.முழுமையான விபரத்தைத் தெரிவிக்க மறுக்கின்றனர்.யாரையும் பார்க்க அனுமதிப்பதில்லை.கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி கடந்த ஒரு வருடமாகவே வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.அவர் உடல்நிலை சரியில்லையென பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.ஆனால் யாரும் வெளியே சொல்ல மறுக்கிறார்கள் என்று தெரிவித்த ரோடிப் இணையதள செய்தி நிறுவனம் மீது கிரிமினல் மானநட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அவரின் உடல்நிலை குறித்து விவாதப் பொருளாக்கியது.கடைசியாக புதன் கிழமை மெட்ரோ ரயில் தொடக்க நிகழ்வை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றதே அவரின் கடைசி நிகழ்ச்சி.

இவ்வாறு இந்தப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் ஆபத்தான நிலையில் இருந்தால் பூரண நலமடைய இயற்கையை இறைஞ்சுகிறேன்.

மொழியாக்கம் செய்து தந்த திருமதி சாராவுக்கு நன்றி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.