News
Loading...

கல்வித் தந்தைகளுக்கு வலை... செக்ஸை வைத்து விலை!

ப்ளாக் மெயில் டெக்னிக்

ஒருத்தனை ஏமாத்தணும்னா அவனுக்கு ஆசையை ஏற்படுத்தணும்’ - இது, சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம். அதே ஸ்டைலில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கல்வி நிறுவன நிர்வாகிகளைக் குறிவைத்து, அவர்களுக்கு ஆசையைக் காட்டி மோசடியை அரங்கேறி வருகிறது ஒரு கும்பல். இவர்களின் டார்கெட் எல்லாம் 50 வயதைத் தாண்டிய, வசதிபடைத்த கல்லூரி உரிமையாளர்கள், நிர்வாகிகள்தான். 

நமது செல்போனுக்கு தொடர்புகொண்ட வாசகர் ஒருவர், ‘‘புதுவிதமான மோசடி நடக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சமுதாயத்தில் கௌரவமான நிலையில் இருப்பவர்கள். மோசடிக் கும்பலிடம் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததுடன், மன உளைச்சலில் இருக்கிறார்கள். இதை உங்கள் பத்திரிக்கை மூலமாக அம்பலப்படுத்தினால், மற்றவர்கள் ஏமாறாமல் இருப்பார்கள்’’ என்றார்.

அவரை நேரில் சந்தித்தோம். “என் பெயர் உட்பட யார் பெயரையும் குறிப்பிட வேண்டாம்” எனப் பேசத் தொடங்கினார். ‘‘பிரபாகரன் என்ற ஒருத்தர் மதுரையில தொண்டு நிறுவனம் நடத்துறாரு. காலேஜ்ல பசங்களைச் சேர்த்து விடுற புரோக்கர் வேலையும் பாக்குறாரு. அப்படி, காலேஜ்களுக்குப் போறப்போ, காலேஜ் நிர்வாகிகள்கிட்ட இனிக்க இனிக்கப் பேசி நெருங்கிருவாரு. அப்புறம், அவருக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கனு சில பொண்ணுங்களை அவங்களுக்கு அறிமுகம் செய்வாரு.  ‘இவங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். நீங்க ஏதாவது வேலை போட்டுக்கொடுங்க’னு சொல்வாரு. பிறகு, அடிக்கடி அந்தப் பொண்ணுங்களை அனுப்பி, நிர்வாகிகளைச் சந்திக்க வெப்பாரு. அந்தப் பொண்ணுங்க கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுவாங்க. அதுல சில பேர் கவுந்திருவாங்க. அந்த பெரிய மனிதர்களோட செல்போன் நம்பரை வாங்கிட்டு, எஸ்.எம்.எஸ்., சாட்டிங்னு அந்தப் பொண்ணுங்க வலை விரிப்பாங்க. டேட்டிங்ல அந்தப் பொண்ணுங்களோட நெருக்கமா இருக்குறப்போ, அவங்களுக்குத் தெரியாமலே வீடியோ, போட்டோ எடுத்திடுவாங்க.

அதைவைத்து, லட்சக் கணக்குல பணம் கேட்டு மிரட்டுவாங்க. ‘பணம் கொடுக்கலைனா.. வீடியோவை நெட்ல விடுவேன்’னு மிரட்ட ஆரம்பிப்பாங்க. அதுக்குப் பயந்து, அவங்க கேக்குறப்போ எல்லாம் பணம் கொடுப்பாங்க. மதுரை காமராஜர் பல்கலைக்

கழக நிர்வாகி ஒருத்தர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் கல்லூரி டைரக்டர்ஸ் ரெண்டு பேரு, பரமக்குடியில ஒருத்தர்னு இவங்களால பாதிக்கப்பட்டவங்களோட லிஸ்ட் பெருசு. இதை பின்னால இருந்து டைரக்ட் பண்றதெல்லாம் பிரபாகரன் தான். அந்தப் பொண்ணுங்களும் ஏதோ ஒருவகையில பிரபாகரன்கிட்ட சிக்கியிருக்கவங்கதான்’’ என்றார்.

பாதிக்கப்பட்ட கல்லூரி நிர்வாகி ஒருவரிடம் நம்மை அவர் அழைத்துச் சென்றார். சற்று தயக்கத்துடனே அந்த கல்லூரி நிர்வாகி பேச ஆரம்பித்தார். ‘‘ நான் ஆரம்பத்துல நிர்வாகியா இருந்த கல்லூரிக்கு வந்த அந்த ஆளு, ஒரு பொண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினார். ‘ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். ஏதாவது வேலைக் கொடுத்து உதவி பண்ணுங்க’னு கேட்டார். அங்கே வேலை எதுவும் காலியாக இல்லை. பிறகு, வேற ஒரு கல்லூரியில டைரக்டரா சேர்ந்தேன். மறுபடியும் ஒருநாள் வந்து அவங்க வேலை கேட்டாங்க. வேலை இல்லைனு சொன்னேன். பிறகு, அடிக்கடி வர ஆரம்பிச்சாங்க. ஒரு செமினாருக்காக மதுரைக்குப் போனேன். அப்ப, அந்தப் பொண்ணு போன் பண்ணி, ‘இன்னிக்கு எங்க வீட்லதான் நீங்க சாப்பிடணும். என் கணவர் உங்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கார்’னு சொன்னாங்க. அங்க போனா, அந்தம்மா மட்டும் இருந்தாங்க. கணவர் இல்லை. திடீர்னு என்னைக் கட்டிபிட்டிச்சு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் அதிர்ச்சியாகி, வேகமா வெளியே வந்துட்டேன். அதை பிளான் பண்ணி போட்டோ எடுத்திருக்காங்க. அதைக் காட்டி என்னை மிரட்டிப் பணம் கேட்குறாங்க’’ என்று கண்கலங்கினார்.

கல்வித் தந்தைகளே உஷார்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.