News
Loading...

*பட்டைய கிளப்பும் ரிலையன்ஸ் ஜியோ!*

பட்டைய கிளப்பும் ரிலையன்ஸ் ஜியோ

செல்போன் அவுட்கோயிங் ரூ.16/- இன்கமிங் ரூ.8/- சோனி எரிக்ஸன், மோட்டரோலோ கம்பெனிகளின் ஆதிக்கம் என *பணக்காரர்களின் அடையாளமாக இருந்த மொபைல் போன்* ஒன்றை ரூ.500க்கும் அப்புறம் ரூ.500க்கு இரண்டாகவும் கொடுத்து இந்திய தொலைதொடர்பு எல்லையை விரிவுபடுத்தி அனைத்து இந்தியர்களின் கைகளிலும் செல்போனை கொண்டு சேர்த்த பெருமை *ரிலையன்ஸ் குழுமத்திற்கே* சாரும். (அதில் ஆயிரம் குளறுபடிகள் உள்ளது, அது அரசியல் என்பது தனிக்கதை ஆனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி)

பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு இணைய சேவையை முன்னிறுத்தி செல்போன்கள் வரத்துவங்கியதும் மக்களே வெறுத்து போகும் அளவுக்கு தினம் ஒரு திட்டங்கள், அடாவடித்தனமான கட்டணங்கள் என ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் ஆட்டம் போடத் துவங்கியன.

*களத்தில் குதித்த ரிலையன்ஸ்!*

*LYF* என்ற செல்போனுடன் *JIO* எந்த சிம் கார்டையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாவின் "டான்" ரிலையன்ஸ். முதல் மூன்று மாதங்களுக்கு இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் முற்றிலும் இலவசம் அதோடு 4g இணைய சேவையை அதே மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் அதுவும் இலவசம் என அறிவுறுத்தியது. 

ரிலையன்ஸ் டிஜிட்டல் எங்குள்ளது எனத் தெரியாதவர்கள் கூட வழி கேட்டு தற்போது படையெடுக்க துவங்கிவிட்டனர். கடந்த ஒரு வார காலமாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட் முகவரி ரிலையன்ஸ் ஷோரூம்கள் தானாம்.

*தற்போது இலவச சிம் கார்டுகளை அனைத்து 4G பயன்படுத்தும் மொபைல் போன் பயன்படுத்துவர்களுக்கும் தர துவங்கிவிட்டது ரிலையன்ஸ். அதுவும் மூன்று மாத இலவச திட்டங்களுடன்.....*
தற்போது பிற கம்பெனிகள் தங்கள் வாடிக்கையாளர்களை இருப்பில் வைத்து கொள்ள படாதபாடுபட்டு கொண்டுள்ளன. கலர் கலராக வானவேடிக்கைகளை துவக்கிவிட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு கட்டணத்தை ரிலையன்ஸ் உயர்த்திவிடும் எனவே பணத்தை விரயம் செய்யாதீர்கள் என பிரச்சாரத்தை துவக்கினர்.

*ஆப்பு வைத்த ரிலையன்ஸ்!*

அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது ரிலையன்ஸ்! மூன்று மாதங்களுக்கு பிறகு வெறும் ரூ.97க்கு ரீ-சார்ஜ் செய்தால் வாய்ஸ் காலுடன் 10GB 4G இணைய சேவை கிடைக்கும் என அறிவிப்பை வெளியிட்டு பிரச்சாரத்தை முறியடித்துவிட்டது. வாய்ஸ் கால் 10பைசாவிற்குள் இந்தியா முழுக்க பேசிக்கொள்ளலாம். ரோமிங் கிடையாது.

ஆயிரம் இருந்தாலும் ஒரு இந்திய கம்பெனி பொருளுக்கு வெளிநாட்டு கம்பெனிகள் பயந்து நடுங்குவதை பார்த்து பெருமையாக தான் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.