News
Loading...

நெல்லை சாலைக்கு அவினாஷ் பெயர்

நெல்லை சாலைக்கு அவினாஷ் பெயர்

உடல் உறுப்புகளை தானம் செய்து, ஆறு பேருக்கு வாழ்வளித்த சிறுவன் அவினாஷின் பெயர், நெல்லையில், ஒரு சாலைக்கு சூட்டப்பட்டு உள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த சுவாமிநாதன் - லதா தம்பதியின் மகன் அவினாஷ், 12; ஆக., 18ல், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். 

பெற்றோர் விருப்பப்படி, நெல்லை தனியார் மருத்துவ மனையில் ஆப்பரேஷன் மூலம், அவினாஷின் இதயம், கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய ஆறு உறுப்புகள் எடுக்கப்பட்டு, ஆறு பேருக்கு பொருத்தப்பட்டன. நெல்லை, என்.ஜி.ஓ., காலனியில், மத்திய அரசின், 'பிராவிடன்ட் பண்ட்' அலுவலகம் உள்ளது. 

அந்த சாலைக்கு, 'அவினாஷ் சாலை' என, பெயர் சூட்டும்படி, நெல்லை மாநகராட்சி மேயர் புவனேஸ்வரிக்கு கோரிக்கை வந்தது. இதன்படி, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

மேயர் புவனேஸ்வரி கூறுகையில், ''உடல் தானத்தை வலியுறுத்தும் வகையில், சிறுவன் அவினாஷ் பெயரை சூட்டிஉள்ளோம். 

''இதேபோல, வண்ணார்பேட்டை சாலைத்தெரு, சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனும், அவரது கதாபாத்திரங்களும் வாழ்ந்த பகுதி. எனவே, சாலைத்தெரு இனி, 'புதுமைப்பித்தன் சாலை' என, அழைக்கப்படும்,'' என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.