News
Loading...

சிறுவாணியில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது: கோவையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

சிறுவாணியில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்க கூடாது கோவையில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட ஆய்வு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கிய மத்திய அரசையும், அனுமதி பெற்ற கேரள அரசையும், மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் கண்டித்து கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட திட்டமிருக்கக்கூடிய முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 

இந்நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய அரசையும், அனுமதி பெற்ற கேரள அரசையும், மெத்தனமாக இருந்த தமிழக அரசையும் கண்டித்து கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்குகிறார். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் ஸ்டாலின் அவர்கள் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். இதற்கு முன்னதாக சென்னையில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். 

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது காலை சரியாக 10.30 மணி அளவில் துவங்க இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மெத்தனமாக இருக்கும் தமிழக அரசை தட்டி எழுப்பும் விதமாக இருக்கும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...