News
Loading...

பெண் குழந்தை என ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணி வயிற்றில் ஆசிட் ஊற்றிய மாமியார்

பெண் குழந்தை என ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணி வயிற்றில் ஆசிட் ஊற்றிய மாமியார்

பெண் குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் கூறியதால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் ஆசிட் ஊற்றிய மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், முத்துகூரு மண்டலம் கோடுசாமிகன்றிகா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ்(30). இவருக்கும், தோட்டபல்லிகூடுரு கிராமத்தை சேர்ந்த கிரிஜாவுக்கும் (26) கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரிஜா மீண்டும் கர்ப்பமானார். ஏற்கனவே கிரிஜாவிற்கு பெண் குழந்தை பிறந்ததால், மாமியார் லட்சுமி காந்தம்மாள், நாத்தனார் சுபாஷினி ஆகியோர் கிரிஜாவை சித்ரவதை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் கிரிஜா கர்ப்பம் தரிக்கவே கடந்த வாரம் கிரிஜாவின் ஜாதகத்தை லட்சுமி காந்தம்மாள், சுபாஷினி ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் காண்பித்து என்ன குழந்தை பிறக்கும் என கேட்டுள்ளனர்.

அப்போது கிரிஜாவிற்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த லட்சுமி காந்தம்மாள், சுபாஷினி ஆகியோர் கிரிஜாவிடம் கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு கிரிஜா மறுத்ததால், சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி கிரிஜாவின் வயிற்றின் மீது ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்தார்களாம். 

இதில் வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய கிரிஜா இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள மாமியார் லட்சுமி காந்தம்மாள், நாத்தனார் சுபாஷினியை தேடி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.