News
Loading...

ஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்!

ஜியோவை விட குறைந்த பேக்கேஜ் கொடுக்க பிஎஸ்என்எல் திட்டம்!
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க்குகளுக்கு இடையே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின்அதிரடி ஆஃபர்களால் எல்லா நெட்வொர்க்களும் போட்டா போட்டியில் விலையை குறைகக் முனைப்பு காட்டுகின்றன. அந்த வகையில் ஜியோவை விட குறைந்த விலையில் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஜியோ ஆஃபர் போன்று இலவச வாய்ஸ் அழைப்புகளை பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஜியோ 4ஜி சிம்மில் மட்டும் கிடைக்கும் இந்த ஆஃபரை, பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜியிலும் வழங்க உள்ளனர்.

ஜியோவை விட 2 முதல் 4 ரூபாய் வரை குறைவான பேக்கேஜிலும், புத்தாண்டு முதல் லைஃப் டைம் இலவச வாய்ஸ் அழைப்புகளும் வழங்க திட்டமிட்டுவருவதாக பிஎஸ்என்எல்-ன் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார். கேரளா, ஹிமாச்சல், ஹரியானா, ஒடிஷா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் வலுவானதாக உள்ளதாகவும், புத்தாண்டு முதல் ஜியோவை விட குறைந்த விலையில் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட உள்ளன. ஜியோவை தொடர்ந்து பிஎஸ்என்எல்-ன் ஆஃபர்கள் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நெட்வொர்க்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.