News
Loading...

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை சாவு

தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட குழந்தை காய்ச்சல் ஏற்பட்டு திடீரென இறந்தது. உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கீழவாசல் சிராஜ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். கார் டிரைவர். இவரது மனைவி பரணி (20). இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. 

இக்குழந்தைக்கு தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதியன்று, 3-வது தடுப்பூசி போடப்பட்டது. மறுநாள் அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக ராஜா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 

இந்தநிலையில் அந்த குழந்தை நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையிலேயே இறந்தது. தடுப்பூசி போட்டதால்தான் ஏதோ பிரச்னை ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது, எனவே உடலை வாங்க மாட்டோம், குழந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர். 

ஆனால் டாக்டர்கள் தரப்பில், குழந்தைக்கு சளி தொந்தரவு அதிகமாக இருந்ததால் இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலத்தை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...