News
Loading...

சாக்கோ பார் - திரை விமர்சனம்

சாக்கோ பார் - திரை விமர்சனம்

கரு: ஐதராபாத்தில் ஒரு வீட்டில் நிகழ்ந்த திகில் சம்பவம் தான் இப்படக்கரு.

கதை: கல்லூரி மாணவியான தேஜஸ்வினியின் பெற்றோர் ஒரு கல்யாணத்திற்காக வெளியூர் செல்கிறார்கள். மிகப்பெரிய வீட்டில் தேஜஸ்வினி தனியாக இருப்பதை அறிந்த அவளுடைய காதலன் நவ்தீப், அவளைப் பார்க்கஅந்த வீட்டிற்கு வருகிறான். அங்கு இருக்கும் பெரியதவளை மாதிரியான ஒரு பொம்மையை பார்க்கும் நவ்தீப்,அது என்னவென்று தேஜஸ்வினியிடம் கேட்கிறான்.

அதற்கு அவள், அந்த வீட்டை கட்டியவர்கள்., பேய் பிசாசு இந்த வீட்டை நெருங்க கூடாது எனும் செண்டிமென்டுக்காக அதைவைத்திருப்பதாக கூறுகிறாள். இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் நவ்தீப், அந்தபொம்மையை தனது காலால்எட்டி உதைக்கிறார். இதன்பின்னர், அங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வெளியே கிளம்புகிறார். பின்னர்,அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் எல்லாம் நடக்கஆரம்பிக்கிறது.

பியானா வாசிக்கும் சத்தம், பத்துநிமிடத்திற்கு ஒருமுறை வீட்டு கதவை தட்டும்சத்தம், பாத்ரூமில் பேய்களின் அலறல், குழாயில் தண்ணீர் விடாமல் சொட்டுவது என தொடர்ந்து நடப்பது... ஹீரோயினை ரொம்பவும்பயமுறுத்துகிறது இதனால், துணைக்கு தனது காதலன்நவ்தீப்பை வரவழைக்கிறாள். அவர்வந்ததும் நாயகி சொல்வது எதையும் நம்பவில்லை. இருந்தாலும், முதலில் தண்ணீர்சொட்டும் குழாயை சரிசெய்யபிளம்பரை வரவழைக்கிறார்.

பிளம்பர் ஒரு மந்திரவாதியைப் போல இருக்கவே, தேஜஸ்வினி மேலும் பயப்படுகிறாள். மேலும், அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியும், அவளது தம்பியும்சேர்ந்துகொண்டு காட்சிக்குகாட்சி இவர்களை பயமுறுத்துகிறார்கள். உண்மையில் அந்த வீட்டில் என்னதான்நடக்கிறது? இவர்களை பயமுறுத்துபவர்கள் யார்? அந்த தவளை பொம்மைக்கும்,அமானுஷ்ய விஷயங்களுக்கும் என்னசம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

காட்சிப்படுத்தல்: சாய் கார்த்திக்கின் அதிரடி இசை , ஆஞ்சியின் மிரட்டும் ஓளிப்பதிவு ஆகியவற்றின் உதவியுடன் ஐதராபாத்தில் நடந்த உண்மைசம்பவத்தை கதையாக வைத்து உருவாகியிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. காட்சிக்கு காட்சிமிரட்டலாக இருக்கிறது... என்றாலும், ஒட்டு மொத்த காட்சிப்படுத்தலில் மிகவும் மெதுவாக காட்சிகள் நகர் வது ரசிகனை பாடாய் படுத்துகிறது.

கதாநாயகர்: படத்தில் நாயகன் நவ்தீப், நாயகி தேஜஸ்வினி உள்ளிட்ட மொத்தமே ஆறு பேர் தான்கதாபாத்திரங்கள். இதில் நவ்தீப் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதைநாயகி: தேஜஸ்வினி படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். படம் முழுக்க கவர்ச்சி ஆடையிலேயே வலம்வந்து ரசிகர்களை சுண்டியிழுத்திருக்கிறார். அவருடைய பயம் நம்மையும் சேர்த்து பயமுறுத்துகிறது.

பிற நட்சத்திரங்கள்: நாயகன் , நாயகியையும் சேர்த்து மொத்தமே ஆறு பேர் தான் கதாபாத்திரங்கள்... வேலைக்காரியாக வருபவரின் பார்வையே மிரட்டலாக இருக்கிறது. பேய் கிழவியின் மேக்கப்பும் அபாரமாக இருக்கிறது. பிளம்பரமாக வருபவரின் ஆக்ஷன்காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.

தொழில்நுட்பகலைஞர்கள்: பிரத்யோதனின் இசையும், பிரதாப் குமார் சங்காவின் படத்தொகுப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மிரட்டல் காட்சிகளில் வரும் பின்னணி இசை ஒவராகவே மிரட்டியிருக்கிறது. ஆஞ்சியின் ஒளிப்பதிவு படத்திற்கு முதுகெலும்பாய் இருக்கிறது.

பலம்: ஐதராபாத்தில் ஒரு விட்டில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக வைத்து உருவாகியிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா .... எனும் செய்தி படத்திற்கு பெரும் பலம் .

பலவீனம்: மொத்தப் படமும் காட்சிக்கு காட்சி மிரட்டலாக இருக்கிறது... என்றாலும், மிகவும் மெதுவாக காட்சிகள் நகர் வது ரசிகனை படுத்துகிறது.... என்பது சற்றே பெரிய பலவீனம்.

இயக்கம்: ஐதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கதையாக வைத்து இப்படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. பிளோ கேம் என்னும் புதுவிதமான கேமரா மூலம் மொத்த படத்தையும் பதிவாக்கியிருக்கிறார்... அதேபோல், மிகக்குறைந்த பட்ஜெட்டிலும் , ஹாலிவுட்டிற்கு நிகரான தரமானபடத்தை கொடுக்க முடியும்என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்திருக்கிறார்... ராம்கோபால் ...என்பது ஆறுதல்.

பைனல்" பன்ச் ": மொத்தத்தில் ''சாக்கோபார்' 'மிரட்டல் -ஷாக் பார் ."முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.