News
Loading...

புதுவையில் பாரதியார் பாடிய இடம் குயில் தோப்பாக அறிவிக்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுவையில் பாரதியார் பாடிய இடம் குயில் தோப்பாக அறிவிக்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரிபுதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேசிய மகாகவி பாரதியார் புதுவையில் வாழ்ந்து சுதந்திர கனலை ஏற்றும் பாடல்களை எழுதினார். அவர் பாடிய கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் உள்ள தோப்பை குயில் தோப்பாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த கோரிக்கைகளை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியும் வலியுறுத்தி இருந்தனர். தற்போது பாரதியார் பாடிய தோப்பு பகுதி வீடும், மனை பகுதிகளாக உருவாகி உள்ளது. இருப்பினும் அங்கு ஒரு பகுதியை தேர்வு செய்து பாரதியார் பாடிய குயில் தோப்பு என அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்போம்.

பாரதியார் நினைவு நாளில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...