News
Loading...

அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்கள் அடியோடு ஒழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒபாமா

வாஷிங்டன்: அல்கொய்தா, ஐ.எஸ். தீவிரவாத இயக்கங்களை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகள் ஓயாது என அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடந்த 15-ம் ஆண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஒபாமா உரையாற்றினார். 15-ம் ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த கொடூரத்தை நினைவுக்கூர்ந்த அவர் அதற்கு காரணமான ஒசாமா பின்லேடனுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டதாக குறிப்பிட்டார். 

அதே சமயம் உலகம் முழுவதும் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஒபாமா கூறியுள்ளார். நாச வேலைகளுக்கு காரணமான தீவிரவாத இயக்கங்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஒபாமா தெரிவித்தார். 2001-ம் செப்டம்பர் 11-ம் தேதி தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்காவை உலுக்கியது. நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் வெடிகுண்டு நிரப்பிய விமானங்களால் தகர்க்கப்பட்டு மண்ணொடு மண்ணாகியது. 

அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 3000 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் கோர முகத்தை வெளிக்காட்டிய இந்த தாக்குதலின் 15-ம் ஆண்டு தினத்தையொட்டி அமெரிக்காவில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...