News
Loading...

பள்ளி, கல்லூரிகளில் இனி கட்டாய பாடமாகிறது சுற்றுச்சூழல்

பள்ளி, கல்லூரிகளில் இனி கட்டாய பாடமாகிறது சுற்றுச்சூழல்

புதுடில்லி : பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடம் ஆக்குமாறு 1991-ம் ஆண்டு, அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 
இந்நிலையில், அந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்று கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடமாக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...