News
Loading...

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

தந்தையின் சடலத்தை கை வண்டியில் இழுத்துச் சென்ற மகன்

உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் (70). உடல்நலக்குறைவால் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மகன் சூரஜுடன் வந்திருந்தார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துமனையில் அனுமதிப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதன் பேரில் காலை 8 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக காலை 11 மணியளவில் இறந்தார். இதன் காரணமாக இறந்த தன் தந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இப்போதைக்கு ஆம்புலன்ஸ் வசதியில்லை என்று மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மன வருத்தமடைந்த சூரஜ் தனது நண்பர்களை வரவழைத்து தந்தையின் சடலத்தை கை வண்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், சம்பவம் நடந்தது தொடர்பாக யாரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.