News
Loading...

நாயகி - திரை விமர்சனம்

நாயகி - திரை விமர்சனம்

கரு : சினிமா ஆசை காட்டி தன்னை சிதைத்து, சிதையாக்கி , புதைத்தவனை பழிக்கு பழிவாங்கும் இளம் பெண்ணின் ஆவி தான் கரு.

கதை : சென்னை - செங்கல்பட்டு இடையில் இருக்கும் ஊர் நந்திவரம். அந்த ஊர் பெரிய மனிதரின் மகள் காயத்ரி. சின்ன வயதிலிருந்தே நடிப்பாசையுடன் வளரும் , வளர்க்கப்படும் காயத்ரியின் பருவ வயதில் , அவரை நடிகையாக்க அழைத்துப் போய் கற்பழித்து கொலை செய்கிறான் சினிமா ஒளிப்பதிவு இளை ஞன் யுகேந்திரன் .

ஆன்மா சாந்தியடையாமல் ஆவியாகும் காயத்ரி, நந்தவரத்தில் உள்ள பண்ணை வீட்டில் பேயாக குடியேறி ஊர்மக்களை அலறவிட்டு., தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி தீர்க்கும் கதை தான் நாயகி படத்தினுடைய மொத்த கதையும் .

காட்சிப்படுத்தல் : த்ரிஷாவை மட்டுமே நம்பி பெரும்பாலான காட்சிகள் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதும் , ப்ளாஷ்பேக் தவிர்த்து படம் முழுக்க அவர் பேயாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் ரசிகனைபடுத்துகிறது.

கதாநாயகி : காயத்ரியாக, வழக்கம் போலவே அபரிமிதமானஅழகோடு அசத்தலாக படம் முழுக்க பவனி வருகிறார் த்ரிஷா. படம் முழுக்க அழகிய ஆவியாகவும் , சினிமா ஆசையில் சீரழியம் அப்பாவி பெண்ணாகவும் த்ரிஷாவின் நடை , உடை , பாவனைகள் , பாவங்கள் எல்லாம் செம கச்சிதம். கதை மற்றும் காட்சியமைப்புபடி த்ரிஷா இறந்து போவதும் ஆவியால் நடமாடுவதும் மட்டுமே ரசிகனுக்கு வேதனை.

கதாநாயகர் : படத்தில் கதாநாயகர் என்று யாரும் கிடையாது வில்லனிக் ஹீரோவாக கூட அல்லாமல் ., கிட்டத்தட்ட வில்லானாக யுகேந்திரனாக வரும் கணேஷ் வெங்கட்ராம் ப்ளாஷ்பேக் சீன்களில் மட்டும் ரசிகனின் கவனம் ஈர்க்கிறார்.

பிற நட்சத்திரங்கள் : பிற நட்சத்திரங்களில் காயத்ரி - த்ரிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் மட்டும் கச்சிதம் . மீதி, நமக்கு அவ்வளவாய் தெரியாத தெலுங்கு முகங்கள் என்பது பாவம்!

தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ரகுகுன்ச்சேவின் இசையில் "என்னானதோ எதானதோ... " பாடல் மட்டும் சுப ராகம். ஒளிப்பதிவு பேய் படங்களுக்கே உரித்தான மிரட்டல் பதிவு .

பலம் : கிராபிக்ஸ் கைங்கர்யத்தில் பறக்கும் டி.வி ரிமோட், கர்ண கொடூரமாய் துரத்தும் கசாப்புக் கடை கத்தி , சில வினாடிகள் தோன்றி மறையும் பேய் உருவங்கள் எல்லாம் படத்திற்கு பெரும் பலம் .

பலவீனம் : அப்படி பயமுறுத்தும் பேய் உருவங்களும் பறக்கும் , துரத்தும் சாதனங்களும் ரசிகனின் சில நிமிட ஆச்சர்ய புருவ உயர்த்த லோடு காணாமல் போய்விடும் என்பது பலவீனம்.

இயக்கம் : இயக்குனர் கோவி ,பின்னணி இசையில் திகிலையும் , திடுக்கிடலையும் மிரட்டலாக கூட்டி , காட்சிகளில் காமெடிக்கே முக்கியத்துவம் கூட்டியிருப்பதாலும் , படத்தில் இடம்பெறும் பெரும்பாலான தெலுங்கு முகங்கள் , கோக்கு மாக்காய் தமிழ் பேசியிருப்பதாலும் அவ்வளவாய் தமிழ் ரசிகனால் " நாயகி " யுடன் ஒட்டி உறவாட முடியவில்லை என்பது வருத்தம்.

பைனல்" பன்ச் " : ஒரு கட்டத்திற்கு மேல் , த்ரிஷாவை பேயாய் பார்க்க முடியவில்லை என்பதால், "நாயகியை ' நல் தோழி'யாக்கிக் கொள்ள முடியவில்லை ரசிகனால் என்பது பாவம், தயாரிப்பாளருக்கு பாதிக்கும் லாபம் !"

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.