News
Loading...

ஆன்லைனில் புகாரும் தரலாம்!

ஆன்லைனில் புகாரும் தரலாம்!

* CCTNS (Crime and Criminal Tracking Network System) என்ற இந்த முறை 2008ம் வருடம், மும்பை தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது. இதன் முக்கிய நோக்கமே இந்தியா முழுவதும் உள்ள குற்றப் பதிவு மற்றும் தரவுகளை ஒரு சாஃப்ட்வேரின் கீழ் ஒருங்கிணைப்பதாகும். இதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

* தமிழக காவல்துறையும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி செய்துள்ளது.  http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?12  என்ற முகவரியில் இருக்கும் படிவத்தில் புகார் செய்யலாம். புகாருக்கான ஆதாரங்களையும் ஆவணங்களாக இணைக்கும் வசதி உள்ளது. இதில் எஃப்.ஐ.ஆர் ஸ்டேட்டஸ் பற்றிய தகவலும் தேடிப் பார்க்கலாம். 

* இதற்கென மொபைல் போன் ஆப்பையும் வைத்திருக்கிறது தமிழக காவல்துறை. www.tnpolice.gov.in இணையதளத்தில் சிட்டிசன் சர்வீஸில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்ய முடியும். இதன் வழியாகவும் புகார் தரலாம். எஃப்.ஐ.ஆர் ஸ்டேட்டஸ் செக் பண்ணலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...