News
Loading...

சாத்தியமாகும் பறக்கும் கார்கள்: 2018-ல் அறிமுகமாகிறது

பறக்கும் கார்களை 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. சாலையில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு சுவிட்சை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தைப் போல் இல்லாமல் எந்தவொரு சமதளப்பரப்பிலும் இந்த காரைத் தரையிறக்கவும், அந்த பரப்பிலிருந்தே வானில் பறக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மீட்டர் நீளமும், 2.4 மீ அகலமும் கொண்ட இந்த காருக்கு விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த காருக்கான முன்பதிவினை 2017ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ள ஏரோ மொபில் நிறுவனம், 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டதூரப் பயணங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் கூறியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.