News
Loading...

உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்

உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்

உரி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்தி ரூ. 1 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள உரி என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ கட்டுப்பாட்டு மையம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களுக்கு, வீரர்களின் சொந்த மாநிலத்தின் சார்பாக நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும், இரங்கல் தெரிவிக்கும் விதமாக சூரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியில் பல பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் உணர்ச்சி மிக்க பாடல்களை கேட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி தெளித்தனர்.

உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ. 1 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும், நிதியை ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு கொடுப்பதில் பெருமையடைகிறோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உரி தாக்குதலில் பலியானவர்களுக்காக 1 கோடி நிதி திரட்டல்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.