News
Loading...

இளைஞர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி

இளைஞர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடிய கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரிபுதுவை கவர்னர் கிரண்பேடி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இன்று அவர் அரியாங்குப்பத்தில் ஆர்.கே.நகரில் நடந்த தூய்மை பணியை ஆய்வு செய்ய சென்றார். அப்போது அந்த பகுதி இளைஞர்கள் கைப்பந்து விளையாடி கொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கிய கிரண்பேடி இளைஞர்களை நோக்கி சென்றார்.

கவர்னரை பார்த்ததும் இளைஞர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களிடம் நீங்கள் தினமும் கைப்பந்து விளையாடுகிறீர்களா? எத்தனை அணிகள் வைத்து உள்ளீர்கள் என்று விவரங்களை கேட்டார்.

பின்னர் நானும் கைப்பந்து விளையாடுகிறேன் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து கைப்பந்து ஆடினார்.

கவர்னர் தலைமையில் ஒருஅணியும், தொகுதி எம்.எல்.ஏ ஜெய மூர்த்தி தலைமையில் ஒரு அணியும் தயார் ஆனது.

இரு அணியினரும் ஆவேசமாக விளையாடினார்கள். கவர்னர் கிரண்பேடி நுணுக்கமாக ஆடி பல புள்ளிகளை எடுத்தார்.15 நிமிட நேரம் அவர் விளையாடினார்.

பின்னர் அவர் அந்த பகுதி சிறுவர்களை அழைத்து கைப்பந்து விளையாட சொன்னார்.

அவர்கள் விளாயாடும் போது கவர்னர் கிரண்பேடி ரெப்ரியாக இருந்து போட்டியை நடத்தினார். இதை ஏராளமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

பின்னர் கிரண்பேடி அங்குள்ள செட்டிகுளம் பகுதியில் நடந்த 100 நாள் வேலை திட்ட பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அந்த பகுதி பெண்கள் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வேண்டும் என்று கேட்டனர். இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ மூலமாக கோரிக்கை அனுப்பும்படி கூறினார்.

கவர்னருடன் கலெக்டர் சத்யேந்தர்சிங், கவர்னரின் தனி செயலாளர் தேவநீதி தாஸ்,ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் தயாளன். கொம்யூன் கவுன்சிலர் கலியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அதிகாரி ராகினி மற்றும் பலர் சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...