News
Loading...

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் வ.உ.சி பிறந்த தினம் இன்று! #HBDVOC

வழக்கறிஞர் வ.உ.சிதம்பரனாரின் 145வது பிறந்த தினம்

சமுக வலைதளகளில் கருத்து தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்க்கு பின்னால் எத்தனை தியாகம், நேர்மை, ஆற்றல் காலம் சென்று இருக்கிறது தெரியுமா? 

இன்று யார் பிறந்தநாள் தெரியுமா? சினிமா நடிகர் பிறந்த நாளாகவோ? இல்லை கிரிக்கெட் வீரர் பிறந்த நாளாகவோ இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும். நீங்கள் நலமாக வாழ்வதற்காக பணக்காரனாக, வழக்கறிஞராக வாழ வேண்டியவர் தமிழ், சுதேசியம், என்ற அரசியல் கோட்பாட்டை ஏந்தி வந்தவனை தேசதாய் தாங்கி கொண்ட தினம் ஆகும்.

ஆம், கப்பலோடு வருவேன் இல்லை கடலில் விழுந்து சாவேன் என்ற கப்பலோட்டிய தமிழன், செக்கு இழுத்த செம்மல், வழக்கறிஞர் வ.உ.சிதம்பரனாரின் 145வது பிறந்த தினம். ரூபாய் இருப‌து லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற ஆங்கில அரசின் சூழ்ச்சியை பாலகங்காதரத் திலகர் துணை கொண்டு வென்று தமிழனின் நேர்மையும், வீரத்தையும் பறைசாற்றி பட்டொளி வீசி வங்க கடலில் ஒரு கப்பலில் வந்தது.

கடல் மூலமாக வணிகம் செய்ய வந்தவர்களை, திருப்பி கடல் வணிகத்தால் கலங்க வைத்த ஒரே தலைவன், கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம். சுதேசி கப்பலில் பயணிகள் நிரம்பினாலும் காத்து இருந்து முதலில் ஆங்கிலேயர் கப்பல் சென்ற பிறகுதான் சுதேசி கப்பல் செல்ல வேண்டும் என்ற உத்தரவை நீதியின் துணை கொண்டு விழ்த்தி சுதேசி கப்பல் சென்றது. 

அப்படிபட்ட மாபெரும் வழக்கறிஞர் வ. உ.சிதம்பரம். கப்பலில் செல்ல பயணிகள் கட்டணம் இலவசம், சரக்கு கட்டணம் இலவசம் என்று கூறிய ஆங்கில அரசின் வியாபார தந்திரத்தையும்,அரசியல் சூழ்ச்சியும் கவனித்த சிதம்பரம் இலவசம்! இலவசம் இது நம்மை விலைக்கு வாங்கும் முயற்சி.

அன்றே ந‌ம் மக்களை இலவசத்தை நம்பாதிர்கள் என்று எடுத்து உரைத்தவன் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம். இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920-ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத் புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது. வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார்.

நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். ஆங்கிலேயர்கள் பயந்து தூத்துக்குடி கடலில் உள்ள குட்டி, குட்டி தீவுகளில் இரவு பொழுதை கழித்தார்கள்.

சிதம்பரம் பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் 1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. 

வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது. இப்படிபட்ட மாபெரும் தலைவனை, கப்பலோட்டிய தமிழனை இந்நாளில் நினைவு கூர்வோம்... நம் சந்ததியருக்கும் எடுத்துச்சொல்வோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.