News
Loading...

ஹெர்பல் டீ செய்முறை

ஹெர்பல் டீ

தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி  - தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.

செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி எடுக்க வேண்டும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும். 

ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு தட்டுப் போட்டு மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.  ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

குறிப்பு: டீயில் வேறு ஃப்ளேவர் வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம் அல்லது கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்க்கலாம்.

பலன்கள்: ஹெர்பல் டீ தும்மல், இருமலைக் குறைக்கும்; கபத்தைப் போக்கும்; குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...