

ஹேக் வழிமுறை #01
ப்ராக்ஸி சர்வர் (Proxy server) : இந்த வலைத்தளங்கள் தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் கட்டண சேவை மற்றும் இலவச ட்ரையல் மூலமும் அணுக முடியும்.
மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு :
மேலும் இதில் நீங்கள் எளிதாக உங்கள் ஐபி முகவரியை மறைக்க முடியும் மற்றும் அநாமதேயமாக ஆன்லைனில் இருக்க முடியும். அதன் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு உங்கள் நெட்வொர்க் போக்குவரத்து கண்காணிப்பை தடுக்கும்.

ஹேக் வழிமுறை #02
நீங்கள் ஒரு ப்ராக்ஸி சர்வர் அல்லது தடுக்கப்பட்ட வலைத்தளங்களை அணுக வேறு எந்த கூடுதல் முயற்சியம் எடுக்க தயாராகை இல்லை எனில் அதற்கு பதிலாக பதிவு செய்யும் யூஆர்எல் விலாசத்தில் 'http' என்று டைப் செய்வதற்கு பதிலாக 'https' என்று டைப் செய்து அணுகலை மேற்கொள்ளலாம்.

ஹேக் வழிமுறை #03
தடை செய்யப்பட்ட வலைத்தளத்தை அணுகுவதற்கு நீங்கள் வலைத்தளத்தின் யூஆர்எல்-லை (URL) சுருக்கவும் முடியும். அதை நிகழ்த்த நீங்கள் கூகுள் யூஆர்எல் ஷார்ட்னர் (Google URL Shortener), மூயூஆர்எல் (MooURL)முதலியனவைகளை பயன்படுத்த முடியும். எனினும், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை கையாள போதுமான புத்திசாலியாகவே உள்ளன . எனவே கவனமாக இருக்க வேண்டும்.

ஹேக் வழிமுறை #04
கூகுள் கேச் பயன்படுத்தலாம் : பொதுவாக, இந்த கேச் ஆனது வலைத்தளங்களில் தடுக்கப்பட்டு இருக்கும். எனினும், நீங்கள் 'கேச் ' பதிப்பு கிளிக் செய்ய கேச் வெர்ஷன் வலைதளபக்கத்தினை அனுக நேரிடலாம்.

ஹேக் வழிமுறை #05
இமெயில் மூலமாக அணுகல் பெறுவது : வெப்2மெயில் (Web2Mail) என்ற சேவை என்பது நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வலைத்தளங்களை உங்கள் இன்பாக்ஸிற்கு அனுப்பும் ஒரு இலவச சேவையாகும்.

இதுவொரு பாப்3 (POP3) அக்கவுண்ட் அணுகல் கொண்டது. இதற்கு சைன்-இன் மற்றும் ஒரு பாதுகாப்பான இணைப்பை வழங்கல் போன்ற தேவைகள் கிடையாது. நீங்கள் செய்ய வேண்டிய என்னவென்றால் உங்களுக்கு தேவையான தலைப்பு உடன் சேர்த்து யூஆர்எல்-லை (URL) www@web2mail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.