News
Loading...

காவிரி... காக்டெய்ல்!

காவிரி... காக்டெய்ல்!

சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா கர்நாடகாவில் சிறை வைக்கப்பட்டார். அப்போது ரத்தத்தின் ரத்தங்கள் ஒட்டிய போஸ்டர். அன்று அம்மாவுக்கு தேம்பினார்கள். இப்போது காவிரிக்காக விவசாயிகள் தேம்பி நிற்கிறார்கள்.

காவிரி... காக்டெய்ல்!

காவிரி பிரச்னைக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விவசாயிகளுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க விவசாயிகளுக்கு நேரம் கிடைத்தது...  தண்ணீர் கிடைக்கவில்லை.

காவிரி... காக்டெய்ல்!

குன்ஹா தீர்ப்புக்காக உடனே திரண்ட கோடம்பாக்கம் இப்போது ஆப்சென்ட். கர்நாடகாவிலோ நடிகர்கள் போராட்டம்!

காவிரி... காக்டெய்ல்!

காவிரி... காக்டெய்ல்!

‘‘விவசாயம் செய்யாமல் டவுனையே சுற்றிக்கொண்டிருந்தால் கையில் எப்படிக் காசு இருக்கும்? விவசாயிகள் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கிறார்கள். வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள்; ஃபைனான்ஸ் செய்கிறார்கள்; லாரி வைத்திருக்கிறார்கள்;  ஊடகங்களில் பெயர் வர விளம்பரத்துக்காகப் போராடுகிறார்கள்’’ அமைச்சர் கருப்பண்ணன்

காவிரி... காக்டெய்ல்!

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஆளும்கட்சி  எம்.எல்.ஏ-கள் அத்தனை பேரும் உண்ணாவிரதம் இருந்தார்கள். ‘காவிரி நீரை’ விடுதலை செய்யவும் இப்படி உட்காரலாமே?  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...