News
Loading...

தமிழகத்துக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு

உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : கர்நாடக அணைகளில் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தண்ணீர் திறக்கும் இந்த உத்தரவை திருத்தம் செய்யக் கோரி உச்சநீதிமன்றம் பதிவாளரிடம் கர்நாடக அரசு நேற்றிரவு மனுத்தாக்கல் செய்துள்ளது. கர்நாடக வழக்கறிஞர் மோகன் கத்தார்கி மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுபடி 
போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லாத போதும் திறந்துவிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு 65 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட முடியாதும் என்றும் மனுவில் கர்நாடக கூறியுள்ளது.  

குடிநீர் தேவையை சமாளிப்பதற்கு மட்டுமே தற்போது நீர் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு ஏற்கனவே
திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றே இம்மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடகா மனுவில் கூறியுள்ளது. கூடுதல் தண்ணீர் கோரி காவிரி மேற்பார்வை குழுவிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில், கர்நாடகா புதிய மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனிடையே காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்ட கூடுதல் தண்ணீர் கேட்க கூடாது என தமிழகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...