News
Loading...

மதங்களைத் தாண்டி கலையை உணர வைக்கும் முஸ்லிம் பெண்ணின் 'பேசும் ஓவியம்’

மதங்களைத் தாண்டி கலையை உணர வைக்கும் முஸ்லிம் பெண்ணின் 'பேசும் ஓவியம்’

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளான கிருஷ்ணரின் ஓவியங்களை வரைந்து கண்காட்சியில் வைத்திருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டினைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஜாஸ்னா. 24 வயதான இவர் கடந்த ஒன்றரை வருடமாக கண்ணாடி ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கேரளாவில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இவர் கண்காட்சிக்காக வைத்த கண்ணாடி ஓவிய படங்கள் அனைத்தும் இந்து கடவுளான கிருஷ்ணரின் உருவப்படங்கள். முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளின் ஓவியங்களை வரைந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து அவர் கூறுகையில்,

என்னை பொறுத்தவரை இவை வெறும் ஓவியங்கள். இவற்றை மதத்தோடு ஒப்பிட வேண்டாம். முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளின் உருவ படத்தை வரைகிறார் என வேறுபாடுகளுடன் பார்க்க வேண்டாம். நான் சிறு வயதில் இருக்கும் போதே என் அம்மா என்னை கண்ணா என செல்லமாக அழைப்பார். ஆதலால் கண்ணனின் ஓவியம் என்னை ஈர்த்தது. எனக்கு இந்த ஓவியம் அசாதாரணமானதாகத் தெரியவில்லை. எனத் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.