News
Loading...

தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கேட்ட பெட்டிகடைக்காரர் அடித்துக்கொலை

தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கேட்ட பெட்டிகடைக்காரர் அடித்துக்கொலை

திருவொற்றியூர் அருகேயுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சதானந்தம் (38). இவர், தன் வீட்டு முன்பக்கம் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று காலை ஒரு பைக்கில் வந்த 3 பேர், தண்ணீர் பாக்கெட் வாங்கினர். அதை குடித்து முடித்த பின்னர் தண்ணீர் பாக்கெட்டுக்கு காசு கொடுக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சதானந்தம், பணத்தை கொடுத்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறி பைக்கை எடுக்க விடாமல் பிடித்துள்ளார். உடனே, ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த வாலிபர்கள், சதானந்தத்தை எட்டி உதைத்தனர். இதில் தரையில் விழுந்த அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். 

எனவே, சதானந்தம் சுருண்டு விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அந்த 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் செல்ல முயன்றனர். இவர்களின் சத்தம் கேட்டு சதானந்தம் மனைவி மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். 

உடனடியாக, சுருண்டு மயங்கி கிடந்த சதானந்தத்தை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பைக்கில் தப்பிச் செல்ல முயன்றவர்களை வேறு ஒரு பைக்கில் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். 

அப்போது 3 பேரில் 2 பேரை மட்டும் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டான். பின்னர் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து திருவொற்றியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை ஆர்.கே.நகர், திடீர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (28), சக்தி (30) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதனிடையே பெட்டிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள், பேசின்பிரிட்ஜ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தினர். எனவே, அனைவரும் கலைந்து சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...