News
Loading...

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தாயின் உடலை ரிக்ஷாவில் ஏற்றிச் சென்ற மகன்

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தாயின் உடலை ரிக்ஷாவில் ஏற்றிச் சென்ற மகன்

ஜெய்ப்பூர்: ஒடிசா மாநிலத்தில் இறந்த தாயின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் ரிக்ஷாவில் சடலத்தை தள்ளிக் கொண்டேச் சென்ற அவலம் நடந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஜெய்ப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ‌மருத்துவமனை நிர்வாகத்திடம் ‌அவரது மகன் வாகன உதவி கேட்டதாக தெரிகிறது.



ஆனால், மருத்துவமனை நிர்வாகம் வாகனம் இல்லை என்றுக் கூறியதாக இறந்த தாயின் மகன் தெரிவித்துள்ளார். விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு வாகனங்கள் முதலுதவிக்காக சென்றதால் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாமல் போனதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் ரூ. 12,000 பணம் கேட்டதால் வேறு வழியின்றி தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தனது தாயின் சடலத்தை ஏற்றிச் சென்றுள்ளார்.


இதனிடையே, ஆம்புலன்ஸ் வாகன சேவை கேட்டு யாரும் அணுகவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மாநிலம் சார்பில் 'மகபிரயாணா' எனும் பெயரில் கடந்த மாதம் முதல் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் இலவச வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இறந்தவர்களது உடலை கொண்டு செல்ல வாகன வசதி இல்லாமல் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.