News
Loading...

மெட்ரோ ரயில் சேவை: காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

மெட்ரோ ரயில் சேவை: காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா

சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி மற்றும் சின்னமலை ரயில் நிலையங்களுக்கு இன்று திறந்துவிடப்படுகின்றன. இந்த விழாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். 

சென்னை விமானநிலையம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் ரயில் நிலையத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2, 3 மாதங்களாகவே தொடர்ச்சியாக இந்த பகுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 10,000 பக்கங்களுக்கான ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முக்கியமாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்ட பின்பு, முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 

அந்த துவக்கத்தின் போது முக்கியமாக சொல்லப்பட்ட விஷயம் கட்டணம் அதிகளவில் இருப்பது. தற்போது விமான நிலையம் முதல் சின்னமலை வரை எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்ய இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் தான் இந்த ரயில் சேவைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும். மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக மக்கள் உபயோகப்படுத்தாதற்கு முக்கிய காரணம் மாநகர பேருந்துகளில் செல்லும்போது ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு ரூ.13 ஆகும். ஆனால் மெட்ரோவில் சென்றால் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. ஆகவே நடுத்தர மக்கள் மெட்ரோ ரயில் சேவையை பொதுவாக பயன்படுத்துவதில்லை. இரு வழித்தடங்களில் சென்னையில் மெட்ரோவில் 45 கிமீ தொலைவிற்கு சுரங்கபாதை வழியாகவும், மேல்மட்ட வழியாகவும் நடைபெற்று வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...