News
Loading...

மோடிக்கு முதலிடம்!

மோடிக்கு முதலிடம்!

ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் இந்தியர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. 2 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 358 பேர் அவரைப் பின்பற்றுகிறார்கள். ட்விட்டரில் டாப் 10 இந்தியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மோடி, தலாய் லாமா தவிர மற்ற 8 பேரும் பாலிவுட் சினிமா பிரபலங்களே! அந்தப் பட்டியல்...

1. மோடி - 2,21,30,358
2. அமிதாப் பச்சன் - 2,20,16,429
3. ஷாருக் கான் - 2,08,79,614
4. சல்மான் கான் - 1,90,68,786
5. அமீர் கான் - 1,83,10,561
6. தீபிகா படுகோனே - 1,56,38,319
7. பிரியங்கா சோப்ரா - 1,47,99,682
8. ஹ்ரித்திக் ரோஷன் - 1,46,39,994
9. அக்‌ஷய்குமார் - 1,37,82,785
10. தலாய் லாமா - 1,29,06,468 

இந்த பிரபலங்கள் பலரும் மற்றவர்களைப் பின்பற்றுவதைக் குறைவாகவே செய்கிறார்கள். தேசத் தலைவர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என சிலரையே பின்பற்றுகிறார்கள். குறிப்பாக தலாய் லாமா யாரையுமே பின்பற்றவில்லை. அமீர் கான் 7 பேரையும், அக்‌ஷய் குமார் 18 பேரையும், சல்மான் கான் 22 பேரையும் பின்பற்றுகிறார்கள். மோடி பரவாயில்லை, 1376 பேரைப் பின்பற்றுகிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.