News
Loading...

இந்த காலத்தில் இப்படியும் ஒரு அரசியல்வாதி...!

இந்த காலத்தில் இப்படியும் ஒரு அரசியல்வாதி

புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடி தனது வீட்டு சாப்பாட்டுச் செலவுக்கு சொந்த காசையே பயன்படுத்துகிறார்; அரசு பணத்தில் செலவிடுவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் அலுவலகம் இந்த பதிலைத் தந்துள்ளது.

1br@ அந்த சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு:

பிரதமருடைய வீட்டுச் சமையலுக்கான செலவை யார் செய்கிறார்கள்?

* பிரதமரின் வீட்டில் சமையலுக்காக செலவிடப்படுவது அவருடைய சொந்தப் பணமே; அரசு பணம் அல்ல.

பிரதமருக்கு பிடித்தமான உணவு எது?

* அவருடைய சமையல்காரர் தயாரிக்கும் கம்பு ரொட்டியும் கிச்சடியும் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

மோடி எத்தனை நாள் விடுமுறை எடுத்திருக்கிறார்?

* பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை

பிதரமர் எத்தனை மணி நேரம் பணியாற்றுகிறார்?

* பிரதமர் 24 மணி நேரம் பணியில் இருக்கிறார்

பிரதமரின் வீட்டில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம் என்ன?

* 34 Mbps

பிரதமரின் சமூக வலை தளஙகளை யார் கையாள்கின்றனர்?

* அவருடைய சொந்த பெயரில் உள்ள சமூக வலைதளங்களை அவரே கையாற்கிறார். பிரதமர் அலுவலகத்தின் பெயரில் உள்ள சமூக வலை தளங்களை பிதரமர் அலுவலகம் கையாற்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...