News
Loading...

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாமா?: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

mygov

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்திடுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளது. https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்யாலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதற்காக 5 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் விரும்பத்தக்கதா அப்படி எனில் அதன் சாதக, பாதக அம்சங்கள் என்ன என்பது முதல் கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. சில மாநில சட்டசபைகளின் ஆயுள் பாக்கி இருந்தால் என்ன செய்வது என இரண்டாவது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக மக்களவை மற்றும் சட்டசபை ஆயுளை முன்கூட்டியே நிச்சயிக்க வேண்டுமா என கேட்கப்பட்டுள்ளது.  ஆயுள் முடிவதற்குள் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் என்ன செய்வது நான்காவது கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. மக்களவை அல்லது சட்டசபையில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது ஐந்தாவதாக கேட்கப்பட்டுள்ளது. 

ஒரேநேரத்தில் தேர்தலை நடத்தினால் வாக்களிக்கும் எண்ணம் மக்களிடம் அதிகரிக்கும் என்பதுடன் தேர்தல் செலவை பெருமளவு குறைக்க முடியும் என மத்திய அரசு கருதுவதால் இந்த கருத்துக்கணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...