News
Loading...

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் கின்னஸ் சாதனை..!

உடல் உறுப்பு தானம்

ஒரே மணி நேரத்தில் 6,697 பேர் உடல் உறுப்பு தானம் செய்ததன் மூலம் தமிழகத்தில் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரோட்டரி கிளப் மற்றும் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உடல் உறுப்பு தானம் செய்வதில் கின்னஸ் சாதனை புரிவதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6,697 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யும் படிவங்களில் கையொப்பமிட்டனர். இவர்களில் 3000 பேர் பி.எஸ்.என்.ஏ கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி பிலிப்பைன்சில் ஒரு மணி நேரத்தில் 3,548 பேர் உடல் உறுப்பு தானம் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் 6,697 பேர் ஒரு மணி நேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்து அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...