News
Loading...

கருப்பு பண புழக்கம் குறைக்க ரிசர்வ் வங்கி புது திட்டம்

கருப்பு பண புழக்கம் குறைக்க ரிசர்வ் வங்கி புது திட்டம்

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க நிதியுதவி வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில்  பணம் எடுப்பது குறைந்து வருகிறது. இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைப்பு, ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிப்பு போன்றவை இதற்கு காரணம். 

கார்டு  பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. இதனால் கருப்பு பண புழக்கம் குறையும் என கருதுகிறது. இதற்கு ஏற்ப கடைகள்,  வர்த்தக நிறுவனங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பொருள் வாங்க பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களை நிறுவ ரிசர்வ் வங்கி உதவ இருக்கிறது.

நாடு முழுவதும் 68 கோடிக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை, பிரதமர் மக்கள் நிதி திட்ட (ஜன்தன்  யோஜனா) கணக்குகளால் கடந்த 2 ஆண்டுகளில்தான் அதிகரித்துள்ளது. ஆனால் பிஓஎஸ் இயந்திரங்கள் 12 லட்சத்தில் இருந்து 14 லட்சமாக மட்டுமே  அதிகரித்துள்ளது. 

 டெபிட் கார்டு வைத்திருப்பவர் 10 பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், அதில் 9 பரிவர்த்தனைகள் ஏடிஎம்மிலும், ஒன்று பிஓஎஸ்சிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என  ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே சிறு நகரங்கள், கிராமங்களில் பிஓஎஸ் இயந்திரங்கள் வைக்க மானியமாக நிதி அளிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது.  இத்தகைய நிதி திட்டம் பிற நாடுகளிலும் நல்ல பலன் அளித்துள்ளது என விசா கார்டு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.