News
Loading...

RTI தகவல் : சமோசாவுக்கு ரூ.1 கோடி செலவு செய்யும் ஆம் ஆத்மி அமைச்சர்கள்

RTI தகவல் சமோசாவுக்கு ரூ1 கோடி செலவு செய்யும் ஆம் ஆத்மி அமைச்சர்கள்

புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கேபினட் அமைச்சர்கள் 6 பேர், சமோசா, தேநீருக்காக கடந்த 18 மாதங்களில் மட்டும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர்கள் தேநீர், சமோசாவுக்காக செலவு செய்துள்ள தொகை விவரங்களை தெரிவிக்குமாறு டில்லியைச் சேர்ந்த விவேக் கர்க் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

அவருக்கு, டில்லி அரசின் பொது நிர்வாகத் துறை துணைச் செயலர் கிருஷண் லால் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை காண வந்த விருந்தினர்களுக்கு தேநீர், சமோசாவை அளிப்பதற்காக மொத்தம் ரூ.47.29 லட்சம் செலவு செய்திருக்கிறார்.

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரூ.11.28 லட்சத்தையும், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து, ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கோபால் ராய், ரூ.11.06 லட்சமும் செலவு செய்திருக்கிறார். இதேபோல், சமூக நலத் துறை அமைச்சராக இருந்த சந்தீப் குமார் ரூ.9.11 லட்சமும், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ரூ.9.10 லட்சமும், சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா ரூ.6.30 லட்சமும் சமோசாவுக்காக செலவு செய்திருக்கிறார். இவர்களில் மிகவும் குறைந்தபட்சமாக உணவுத் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் மட்டும் ரூ.5.89 லட்சம் செலவு செய்திருக்கிறார் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...