News
Loading...

ராணுவ கூட்டுப்பயிற்சி; முதல்முறையாக பாகிஸ்தான் வந்த ரஷ்ய வீரர்கள்!

ராணுவ கூட்டுப்பயிற்சி; முதல்முறையாக பாகிஸ்தான் வந்த ரஷ்ய வீரர்கள்!

முதல்முறையாக, பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து, கூட்டுப் போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் விதமாக, ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

பனிப்போர் காலத்தில், தீவிர எதிரி நாடுகளாக செயல்பட்டுவந்த பாகிஸ்தானும், ரஷ்யாவும் தற்போது நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளன. இதன்படி, பாகிஸ்தானுக்கு, பல்வேறு ஆயுத தளவாடங்களை விநியோகித்து வரும் ரஷ்யா, அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து, போர் பயிற்சி நடத்தவும் முன்வந்துள்ளது.

ட்ருஷ்பா 2016 (நட்புறவு 2016) என்ற பெயரில் காஷ்மீர் எல்லையோரம் ஜில்ஜிட், பல்டிஸ்தான் பனிப் பாலைவனப் பகுதியில் இந்த போர்ப்பயிற்சி நடைபெறுகிறது. செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெறும் போர்ப்பயிற்சியில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவில் இருந்து, 200 போர் வீரர்கள் பாகிஸ்தான் வருகை தந்துள்ளனர்.

அத்துடன் ரஷ்ய போர் விமானங்கள் சிலவும் வந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜில்ஜிட், பல்டிஸ்தான் பகுதி, இந்தியாவிற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலையில், அங்கே போர்ப் பயிற்சி நடத்துவது, கவலை அளிப்பதாக உள்ளதென்று, மத்திய அரசு ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளது.

எனினும், திட்டமிட்டபடி போர்ப் பயிற்சி நடைபெறும் என்று ரஷ்யா கூறிவருகிறது. இதனால், இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக, சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.