News
Loading...

ரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா?

ரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா?

ரிலையன்ஸ் தனது கவர்ச்சிகரமான ஜியோ சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Data அல்லது Voice Call இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.

Voice Call-க்கு கட்டணம் செலுத்துவோருக்கு Data முழுமையாக இலவசமாக வழங்கப்படும். Data-வுக்கு கட்டணம் செலுத்துவோருக்கு Voice Call கட்டணம் முற்றாக இல்லை. இந்த பிரத்தியேக அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது ரிலையன்ஸில் Voice Call ஒரு நிமிடத்திற்கு 65 காசுகள் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், Voice Call முற்றாக இலவசமாக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக 1 GB 4G Data-விற்கு ரூ.50 என்ற வீதத்தில் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். இது உலகிலேயே மிகக் குறைந்த Data கட்டணம் ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ Schemes:

ரூ.149, ரூ.499, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.4,999 என விலைகளின் அடிப்படையில் 7 திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.  

ரிலையன்ஸ் ஜியோ #Scheme-கள் என்னென்ன என்று அறிய வேண்டுமா?

ரிலையன்ஸின் இந்த புதிய அறிவிப்பால் அந்நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம், பாரதி ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட போட்டி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

முகேஷ் அம்பானி ரியோ தொடர்பான தனது அறிவிப்பை வெளியிடத் தொடங்கியது முதலே ஏர்டெல் நிறுவன பங்குகள் சரிய தொடங்கின. முற்பகல் 11:50 நிலவரப்படி ஏர்டெல் பங்குகள் 7.99 விழுக்காடு அளவு சரிந்தது. ஏர்டெல் நிறுவன பங்கு ஒன்று ரூ.26.50 சரிந்து ரூ.305.15-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல், ஐடியா நிறுவன பங்குகள், 8.03 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐடியா பங்கு ஒன்று ரூ.7.40 வீழ்ச்சி அடைந்து ரூ.86.05-க்கு விற்பனையாகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.