News
Loading...

கர்நாடகாவில் முழு அடைப்பு: வெறிச்சோடிய சாலைகள்

கர்நாடகாவில் முழு அடைப்பு

பெங்களூரு: காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கர்நாடக அரசு காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதைக் கண்டித்து அம்மாநிலத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 500 அமைப்புகள் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் முழு அடைப்பில் பங்கேற்கும் விதமாக ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனப்போக்குவரத்தும் இயங்கப்படவில்லை. மெட்ரோ ரயில் சேவையும் இன்று நிறுத்தப்படுகிறது. இதனால், முற்றிலும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது.

வங்கிகள், கடைகள், சந்தைகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் முடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்றபோதும் ஊழியர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கும்.

மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த முழு அடைப்பின் போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க கர்நாடக அரசு பொது இடங்கிளல் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...