News
Loading...

மர்லின் மன்றோ வேடத்தில் சிவகார்த்திகேயன்!

மர்லின் மன்றோ வேடத்தில் சிவகார்த்திகேயன்!

'ரெமோ' படத்தில் மர்லின் மன்றோ போல் சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

சினிமா உலகத்தில் கனவு கன்னியாக போற்றப்பட்டவர் மர்லின் மன்றோ. அவர் கொடுத்த மாடலிங் புகைப்படங்கள் பிரபலமடைந்தது. அவர் அணிந்திருக்கும் கவுன், காற்றில் பறக்கும் போது அவர் வெட்கத்துடன் அந்த கவுனை பிடிக்க கையாளும் புகைப்படம் எல்லோரும் மனதிலும் அப்படியே பதிந்துள்ளது. அந்த புகைப்படத்தைப் பார்த்து பல படங்களில் அதுபோல் காட்சியை அமைத்துள்ளார்கள்.

தற்போது 'ரெமோ' படத்திற்காக 'சிவகார்த்திகேயனும் மர்லின் மன்றோவின் போஸை காப்பியடிததுள்ளார். அவர் மர்லின் மன்றோ மாதிரி பெண் வேடமிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போஸ் படத்தில் இடம்பெற்றுள்ளதாக என்பது தெரியவில்லை. இந்தப்படமும் வைரலாக பரவியுள்ளது. இந்தப் படத்தில் நர்ஸ் பெண் வேடமிட்டு நடித்த சிவகார்த்திகேயனின் போஸ் வைரலாகியிருக்கிறது. மேலும் முதன் முதலில் மர்லின் மன்றோ போல் பெண் வேடமிட்டு நடித்த பெருமைககுரியவர் சிவகார்த்திகேயன்தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...