News
Loading...

தமிழக உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 42,907 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 42,907 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, மாநிலம் முழுவதும் இதுவரை 42,907 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இதன்படி, 26, 27 ஆகிய தேதிகளின் முடிவில் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 11,181 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கலின் 3வது நாளான புதன்கிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 31,726 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் இதுவரை 274 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் 919 பேர் நேற்று ஒரேநேரத்தில் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

3 நாட்கள் முடிவாக, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, பல்வேறு கட்சிகள் சார்பாக, வேட்பு மனுதாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 42,907 ஆக உள்ளதென்று, தேர்தல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.