News
Loading...

காவிரி ஆற்றில் புதைந்து தமிழக விவசாயிகள் போராட்டம்!

காவிரி ஆற்றில் புதைந்து தமிழக விவசாயிகள் போராட்டம்

காவிரி நீர் விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள், மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். திருச்சியில் உள்ள காவிரி ஆற்றின் உள்ளே இறங்கிய அவர்கள், மணலில் கழுத்தளவு புதைந்தபடி, தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

தமிழக விவசாயிகளின் நலனைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி உரிய அளவு தண்ணீரைத் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். பதற்றத்தை தணிக்கும் விதமாக, அங்கு விரைந்த போலீசார், விவசாயிகளை கைது செய்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...