News
Loading...

தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசவிருக்கும் முதல்வர் ஜெயலலிதா!?

தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசவிருக்கும் முதல்வர் ஜெயலலிதா!?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் முதலமைச்சரின் உடல் நலம் நன்றாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. ஆனால் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே உள்ளாட்சித்தேர்தல் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார். வேட்பாளர்கள் ஒரே நாளில் மனுத்தாக்கலும் செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தினந்தோறும் பார்த்துவருகிறார். தான் நலமாக இருப்பதாகவும், தொண்டர்களை உள்ளாட்சித்தேர்தலில் கவனம் செலுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் தன் உடல்நிலை குறித்து தொலைக்காட்சி வாயிலாக முதலமைச்சர் ஜெயலலிதா பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.