News
Loading...

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10.15 மணிக்கு காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், பொது பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை தகவல் தெரிவிக்கின்றது.

ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதையடுத்து அப்பகுதியில் மருத்துமனை முன்பு ஏராளமான கட்சிபிரமுகர்களும், தொண்டர்களும் குவியத்துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.