News
Loading...

தமிழகத்தை பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்? வாட்ஸ் அப்பில் பரபரப்பு…

தமிழகத்தை பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்? வாட்ஸ் அப்பில் பரபரப்பு…

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால், சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அதைப் போலவே இந்த ஆண்டும் இருக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்படி என்ன ஆற்காடு பஞ்சாங்கம் சொல்லுதுன்னு தெரியுமா?

துர்முகி ஆண்டு 2016 அக்டோபர் 2016 முதல் ஜனவரி 2017 வரையிலான காலகட்டத்தில் கோவை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை போன்ற பகுதிகளில் மிக அதிகமான நிலநடுக்கம் ஏற்படும்.

சுமார் 400 ஆண்டுகளூக்கு முன்பு பெய்த மழையைவிட அனைத்து ஆறுகளிலும் வற்றாத நீர்பெருக்கு ஏற்படும்.

புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் தமிழ்நாடு முழவதும் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இரவில் அடிக்கடி இடி மின்னல் தோன்றும்! மேலும், கட்டிடங்களுக்கு பலத்த சேதம் விளைவிக்கும்.

7.10.2016- காற்றழத்த தாழ்வு மண்டலம் ஏற்படும். இதன் விளைவாக மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும். இலங்கை, அந்தமான் தவிர தமிழகத்தில் கடலோர பகுதியான இராமேசுவரமும் பாதிப்புக்கு உள்ளாகும்.

15.10.2016- காற்றழத்த தாழ்வு மண்டலம் 1100 கி.மீ வேகத்தில் இருக்கும். இதனால், பூமியில் ஒரு விதமான அதிர்ச்சி ஏற்படும்.

20.10.2016- வங்க கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம் ஏற்படும். மேலும், மணிக்கு 1215 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும்.

3.11.2016 முதல் மழை சென்னையை உலுக்கும்!!! கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாக இருக்கும்.

6.11.2016- காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இதனால், மணிக்கு 1400 கி.மீ வேகத்தில் புயல் வீசும்.

13.11.2016 -முக்கிய அணைகள் நிரம்பி வழியும்.

17.11.2016 காற்றழத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 1053 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், இலங்கை மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்படும்.

22.11.2016- ஜப்பான், இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்படும். இதனால் பலத்த சேதம் ஏற்படும்.
4.12.2016- மழை வெள்ளத்தால் மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரை பாதிக்கப்படும்.

10.12.2016 முதல் சென்னையில் ஒருவார காலம் இடைவிடாது மழை பெய்யும். இதனால், தாம்பரம் அதிக பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

11.12.2016 காற்றழத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு 1130 கி.மீ வேகத்தில் புயல் காற்று உருவாகும். இதனால், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படும்!!! தமிழ்நாட்டில் மலை பாங்கான பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்படும்.

7.1.2017- புது வருடத்தின் தொடக்கத்தில் உருவாகும் காற்றழத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு குறைந்தபட்சமாக 1800 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசுவதோசு இலேசான நிலநடுக்கமும் ஏற்படும்.

இவ்வாறு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...