News
Loading...

கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்

கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்

பள்ளிக்கு வராதது குறித்து கேள்வி கேட்ட ஆசிரியரை மாணவர்கள் குத்திக் கொன்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியரின் கேள்வியால் ஆத்திரமடைந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் அவரை கத்தியால் சராமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நங்லோய் என்ற பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மத்தியில் இக்கொலை நடைபெற்றுள்ளது. டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தக்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி கேட்ட ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற பள்ளி மாணவர்கள்

* டெல்லியில் பள்ளி மாணவர்கள் இருவர் ஆசிரியரை கொலை செய்ததை கண்டித்து நங்கலாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Delhi #schoolteachers


* டெல்லியில் பள்ளி மாணவர்கள் இருவரால் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்: டெல்லி துணை முதல்வர் சிசோடியா 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.