News
Loading...

இரட்டை கோபுர தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடர அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு

இரட்டை கோபுர தாக்குதல்

கடந்த 2001ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக, சவுதி அரேபியா மீது அமெரிக்க மக்கள் வழக்கு தொடர உதவும் மசோதாவுக்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க செனட் தரப்பிலும் இந்த மசோதாவை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்க அதிபர் ஒபாமா மட்டும் இதுவரை அனுமதி அளிக்காமல், சவுதி உடனான உறவு பாதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபிய குடியுரிமை பெற்றவர்கள் ஆவர். எனவே, இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபிய அரசு மீது சட்டப்படி வழக்கு தொடர்ந்து, இழப்பீடு கோர அனுமதி செய்யும் வகையில், புதிய மசோதாவை அமல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...