News
Loading...

ரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு!

விஜய்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு கிட்டத் தட்ட 75 சதவிகிதம் முடிந்து விட்டது. காதல், செண்டிமென்ட், காமெடி காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது வில்லன் களுடன் விஜய் மோதும் அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை அப்படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட இருப்பதாக கூறப்பட்டது. அதனால் விஜய் ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் அறிவித்தது போன்று விஜய் 60-வது படத்தின் டைட்டீல், பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்ற மடைந்தனர். இந்நிலையில், நேற்று வெளியிடுவதாக இருந்த டைட்டில், பர்ஸ்ட் லுக்கை வருகிற 5-ந்தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று மதியம் 12.01 மணிக்கு வெளியிடயிருப்பதாக நேற்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு உறுதியானதாக இருக்கும் என்கிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...