
* நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போன முறை சோபா பின்னாலிருந்து நாலு ஓட்டல் பில் எடுத்தேன்.
* பாத்ரூம் சோப் டப்பாவில் மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப நான் கண்டு எடுத்தேன்.
* மூக்குக் கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரிட்ஜில் இருந்தது.
* வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனப்பான்மையைக் காட்ட வேண்டாம்.
* காலைல பக்கத்து வீட்டுக்குப் பேப்பர் போட்டாச்சான்னு அவங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற மாதிரி.
* சமையல் கட்டு பக்கம் போக வேணாம். ஸிங்க்கை கக்கா கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்.
* சாமி படத்துக்கு விளக்கேத்துங்க... ரெண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு வெந்துடாது.
* வாக்கிங் போறச்சே டி-ஷர்ட் போட்டுக்கோங்க, ஜிப்பா வேணாம். ஜிப்பா கலர்ல ஃப்ரீ சைஸ் சுடிதார் டாப்ஸ் இருக்கு. அனிதா அன்னிக்கு வழிச்சிண்டு சிரிச்சா!
* ஃபுட் கூப்பன், கிரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு... பீரோவ உருட்ட வேணாம்!
* ரெண்டு செக்யூரிட்டிக்கும் நூறு ரூபா கொடுத்திருக்கேன், நீங்க லேட்டா வந்தா கேட் தெறக்க வேண்டாம்னுட்டு!
* பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம, வெளில போய் சாப்பிடுங்க...
* உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும், குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்திப் போட்டுட்டு ‘Uncomfortableளா இருந்தது ஆபீஸ்ல’ன்னு புலம்பாதீங்க.
* அன்னன்னிக்கு அவுத்துப் போடறத தண்ணில நனைச்சு காயப் போடுங்க. வளத்தவங்கள சொல்லணும்!
* தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுண்டு பல் தேய்க்காதீங்க.. அது காலையிலயா, சாயங்காலமான்னு கன்ஃபர்ம் பண்ணிண்டு பால்கனிக்கு வாங்க!
* உங்க மெடிக்கல் ரிப்போர்ட் பர்ஃபெக்ட்டா இருக்கு. அந்த லேடி டாக்டரைப் பாக்க வேண்டிய அவசியமில்லை.
* என் தங்கையின் பிறந்த நாள் போன மாசமே முடிஞ்சிடுச்சி. நடு ராத்திரில ‘விஷ் பண்றேன் பேர்வழி’ன்னு வழிய வேணாம்!
* அப்புறம், என் தோழிகள் எல்லாமே அவுட் ஆஃப் ஸ்டேஷன்...
* கட்டக் கடேசியா ஒண்ணு... ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினைச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன், முன்னறிவிப்பில்லாம!
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா, டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்... என்னா வில்லத்தனம்!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.