News
Loading...

#அதிமுக கொடி கம்பம் நட்டபோது #மின்சாரம் பாய்ந்து #வாலிபர் பரிதாப #பலி

அதிமுக கொடி கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த தம்பிரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் மதன் (20). கும்மிடிப்பூண்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் இன்று (22ம் தேதி) அதிமுக சார்பில் நடைபெறும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அதிமுக கொடியை நட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் மேலே சென்ற மின்வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மதன் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த மதனை மீட்டு கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் இறந்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.