News
Loading...

குப்பைகள் மறுசுழற்சி மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி கிடைக்கும் : நிதின் கட்காரி

குப்பைகள் மறுசுழற்சி மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி கிடைக்கும் : நிதின் கட்காரி

புது டில்லி: இந்தியாவில் குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தினால் ஆண்டொன்றுக்கு ரூ.10 லட்சம் கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். 

தலைநகர் டில்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி இத்தகவலை தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக மதுராவில் இயங்கிவரும் நாட்டிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திரிகரிப்பு நிலையத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மதுரா சுத்திரகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் இந்திய ஆயில் நிறுவனத்திற்கு பயன்படுகிறது என்ற தகவலையும் அளித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் வே திட்டங்கள்
டில்லி குர்கான் எக்ஸ்பிரஸ் சாலையைப் போல நாட்டில் பல எக்ஸ்பிரஸ் வே சாலைகள் அமைக்கப்படும். வதோதரா, மும்பை இடையிலான எக்ஸ்பிரஸ் வழிக்கான வேலைகள் சீக்கிரம் தொடங்கப்படும். நாட்டில் தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 96,000 கி.மீ., ஆக உள்ள நிலையில் எதிர்காலத்தில் அது 2,00,000 கி.மீ., ஆக அதிகரிக்கும் வகையில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள்
கங்கை போன்ற பெரிய நதிகளில் நீர் வழிப் போக்குவரத்து மேம்படுத்தப்படும். நாட்டில் மொத்தம் 36 புதிய நீர்வழிப் போக்குவரத்து வழித்தடங்கள் அமைக்கப்படும். நீர் வழிப்போக்குவரத்தால் ஏரிபொருள் செலவு குறைந்து நாட்டின் பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கும், இவ்வாறு அமைச்சர் பொருளாதார மாநாட்டில் பேசினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...