News
Loading...

நுண்ணீர் பாசன திட்டம் 100 சதவீத மானியம்

நுண்ணீர் பாசன திட்டம் 100 சதவீத மானியம்

மத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம் மற்றும் தெளிப்பான் இனங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் பொருட்கள், போக்குவரத்து செலவினம் மற்றும் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பொருத்துவதற்கான செலவு தொகை மட்டும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படத்துடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

ஆவணங்களுடன் நிலத்தின் வரைபடம், மண், தண்ணீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றையும் விவசாயி இணைத்து வழங்க வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.